Exclusive: நீ காலிங் பெல் அடிக்க அடிக்க என் கைய வெட்டிக்குவேன்- லலித்தை நிலானி மிரட்டும் பரபர ஆடியோ
Recommended Video

சென்னை: காலிங் பெல் அடித்தால் ஒவ்வொரு பெல்லும் ஒவ்வொரு முறை கையை கிழித்துக் கொள்வேன் என லலித்குமாரை நிலானி மிரட்டினார்.
சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நிலானி (36). இவர் டிவி சீரியல் நடிகையாவார். இவர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி லலித்குமார் (30) என்ற இளைஞர் கே கே நகரில் நட்ட நடு ரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார்.
இதனால் நிலானி தலைமறைவாகிவிட்டார் என செய்திகள் வந்தன. ஆனால் அவற்றில் உண்மையில்லை என கூறி நிலானி நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

ஜன்னலில் வந்து பார்
இந்நிலையில் லலித்குமார் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ உரையாடலை ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு பிரத்யேகமாக அளித்துள்ளார் நிலானி. அதில் அவருக்கு போன் செய்யும் லலித்குமார், ஒரே ஒரு முறை என்னை ஜன்னலில் வந்து பார் என்கிறார்.

வீட்டுக்கு வருவேன்
அதற்கு நிலானியோ எனக்கு உன்னை பார்க்க பிடிக்கவில்லை. தயவு செய்து இங்கே இருந்து போய்விடு என்கிறார். ஆனாலும் விடாபிடியாக லலித்குமார் என்னை பார்க்கபிடிக்காவிட்டால் ஜன்னலில் நின்று கொண்டு கண்ணை மூடிக் கொள். நான் உன்னை பார்த்து விட்டு சென்றுவிடுகிறேன். ஜன்னலில் பார்க்காவிட்டால் நான் வீட்டுக்கு வருவேன் என தொல்லை செய்கிறார்.

பிளேடு
இதனால் அழுது கொண்டே நிலானி கூறுகையில் நீ வீட்டுக்கு வந்து ஒவ்வொரு முறையும் அழுத்தும் காலிங் பெல்லுக்கு ஒவ்வொரு முறையும் கையை வெட்டிக் கொள்வேன். நீதான் எனக்கு பிளேடு வாங்கி கொடுத்திருக்கியே என்றும் அவர் கூறுகிறார்.

என்ன நடவடிக்கை
நிலானி கையில் இரு இடங்களில் ஆழமாக பிளேடில் கிழித்து கொண்டுள்ள புகைப்படங்களும் நமது தளத்துக்கு கிடைத்துள்ளன. இந்த ஆடியோ ஆதாரம், விசாரணை இவற்றையெல்லாம் வைத்து போலீஸார் எந்த மாதிரி நடவடிக்கை எடுப்பர் என்பது போக போகத் தான் தெரியும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications