Exclusive: லலித்குமார்தான் மிரட்டினாரா?. .நிலானி வெளியிட்ட பரபரப்பு ஆடியோ
Recommended Video

சென்னை: சீரியல் நடிகை நிலானி லலித்குமாருடன் நடத்திய தொலைபேசி ஆடியோவை ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு பிரத்யேகமாக அளித்துள்ளார் நிலானி.
நடிகை நிலானி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா உதவி இயக்குநர் லலித்குமாரை திருமணம் செய்ய மறுத்ததால் சென்னை கேகே நகரில் நடுரோட்டில் கடந்த 16-ஆம் தேதி தீவைத்து கொளுத்தி கொண்டார்.
தனக்கும் லலித்குமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரை பதிவு செய்தார் நிலானி. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார்.

பரபரப்பு
லலித்குமார் எப்போதும் நிலானியை பெட்ரோல் கேனுடன் மிரட்டி வந்ததாகவும் அவர் கூறினார். இந்நிலையில் தன்னை லலித்குமார் எப்படி மிரட்டினார் என்பது குறித்து பரபரப்பு ஆடியோவை ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு பிரத்யேகமாக நிலானி அளித்துள்ளார்.

100-க்கா
அதில் நிலானிக்கு போன் செய்து லலித்குமார் பேசுகையில், போலீஸுக்கு போன் செய்தீயே எந்த நம்பருக்கு போட்ட, நான் வேண்டுமென்றால் நம்பர் தரவா, கமிஷனர் நம்பர் வேண்டுமா சொல் தருகிறேன். போயும் போயும் 100-க்கு போன் போட்டு இருக்கே.

டார்ச்சர் செய்யும் லலித்குமார்
இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்கு வா, உனக்குதான் வடபழனி ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரரை தெரியும் என்கிறாயே வா செல்லலாம் என்கிறார். அதற்கு நிலானியோ அழுது கொண்டே என்னை விட்டு விடு ஏன் டார்ச்சர் செய்கிறாய். என் வம்புக்கு வராதே.

காலையில் வருகிறேன்
நீ பெரிய ஆள்தான். நான் உன் முன்னால் தூசு. நீ என் தொழிலை கெடுக்க போகிறாய் என்று சொன்னாய், உன்னால் முடிந்ததை செய்து கொள். இதை நான் சவாலாக கூறவில்லை, உனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு இப்போது வரமாட்டேன். காலையில் வருகிறேன் என்று கூறுகிறார் நிலானி.

இன்ஸ்பெக்டரிடம் பேச்சு
பின்னர் லலித்குமாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் போலீஸ் நிலையத்துக்கு போனை கான்பிரன்ஸ் காலில் போடுகிறார். அப்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் சார் என்னை போன் செய்து டார்ச்சர் செய்கிறார். நான் இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டுமாம். அவரும் லைனில் இருக்கிறார் பேசுங்க என்றார்.

எச்சரிக்கை
உடனே இன்ஸ்பெக்டர், ஏன்யா உங்களுக்கு நிலானியின் நம்பரே தெரியாது என்றீரே. இப்ப எப்படி போன் செய்தீர். எதற்காக அந்தம்மாவை தொல்லை செய்கிறீர்கள். நான் உங்களை எச்சரித்து தானே அனுப்பினேன் என்கிறார். அப்போது அடங்க மறுக்கும் லலித்குமார், நீங்கள் போலீஸ் காரர் என்பதற்காக என்னையே மிரட்டுகிறீர்களா என்று அவர் பங்குக்கும் கத்துகிறார். உடனே இன்ஸ்பெக்டர் இருங்க, நானே வீட்டுக்கு வரேன் என்று கூறுகிறார்.

மிரட்டும் லலித்குமார்
உடனே இன்ஸ்பெக்டர், ஏன்யா உங்களுக்கு நிலானியின் நம்பரே தெரியாது என்றீரே. இப்ப எப்படி போன் செய்தீர். எதற்காக அந்தம்மாவை தொல்லை செய்கிறீர்கள். நான் உங்களை எச்சரித்து தானே அனுப்பினேன் என்கிறார். அப்போது அடங்க மறுக்கும் லலித்குமார், நீங்கள் போலீஸ்காரர் என்பதற்காக என்னையே மிரட்டுகிறீர்களா என்று அவர் பங்குக்கும் கத்துகிறார். உடனே இன்ஸ்பெக்டர் இருங்க, நானே வீட்டுக்கு வரேன் என்று கூறுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications