மாஜி எம்.எல்.ஏ.வும், சிட்டிங் எம்.எல்.ஏவும்... நீலகிரி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் ஒரு தொகுதியில் முன்னாள் சட்டசபை உறுப்பினரை நிறுத்தியுள்ளது. இன்னொரு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. நிற்கிறார்.
நீலகிரி மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோ டேட்டா.
பா.மு. முபாரக்
குன்னூர் தொகுதி வேட்பாளராக பா.மு.
முபாரக் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் படுகர் இனத்தைச் சேராதவர் என்பதால் தொகுதி திமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதற்கு மத்தியில் முபாரக் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார் முபாரக். 10 வது படித்துள்ளார். 1984-ஆம் ஆண்டு முதல் 1988 வரை இளைஞரணி மாவட்டச் செயலாளராக பதவி வகித்துள்ளார். 1988 முதல் 2001 வரை நீலகிரி மாவட்டச் செயலாளராகவும், 2001 முதல் 2015 வரை தேர்தல் பணிக் குழுச் செயலாளராகவும், 2015 முதல் மீண்டும் நீலகிரி மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 1996-ஆம் ஆண்டில் கூடலூர் சட்டசபை உறுப்பினராகவும், 1997-ஆம் ஆண்டு அரசு தலைமை கொறடாவாகவும் இருந்தவர்.
திராவிட மணி
கூடலூர் தனித் தொகுதியில்
திராவிட மணி மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2011 தேர்தலிலும் இங்கு வெற்றி பெற்றார். கூடலூர் தொகுதியில் திமுக பலம் வாய்ந்ததாக விளங்குவதால் திராவிடமணி தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது. தோட்டத் தொழிலாளர் மகன். கடந்த 20 வருடங்களாக கூடலூர் பகுதியில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications