நிர்மலா தேவி விவகாரம்.. ஆளுநர் அமைத்த சந்தானம் குழுவுக்கு தடை இல்லை.. மதுரை ஹைகோர்ட் அதிரடி
ஆளுநர் நியமித்துள்ள சந்தானம் குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை: ஆளுநர் நியமித்துள்ள சந்தானம் குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை புதுக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ அண்மையில் வெளியானது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதைத்தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஆனால் இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆளுநர் குழு அமைத்தது செல்லாது என அறிவிக்கக்கோரி செல்வகோமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை
நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் நியமித்துள்ள சந்தானம் குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று செல்வகோமதி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications