குரல் மாதிரி சோதனை.. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் நிர்மலாதேவி
குரல் மாதிரி சோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: குரல் மாதிரி சோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பணமும், இன்னும் சில உதவிகளும் செய்வதாக கூறியுள்ளனர்.

நிர்மலா இதுபற்றி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்போனில் பேசியுள்ளார்.நிர்மலாதேவி பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் ஆளுநர் பெயரும் இருந்ததால் பிரச்சனை பெரிதானது.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். தமிழக அரசும் இதில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதே சமயம் இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்மலா தேவியை, சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து செல்லலாம் என்று மதுரை ஹைகோர்ட் கூறியது.
இந்த நிலையில் அவர் சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். ஆடியோவில் இருக்கும் குரல் குறித்து அவரிடம் சோதனை செய்யப்பட்டது. அவரின் குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின் அவரின் குரல் மாதிரிகளை வைத்து, ஆடியோவில் இருக்கும் குரல் மாதிரிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த ஒப்பீட்டு பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அதேபோல் அவர் ஆடியோவில் பேசிய நபர்கள் குறித்து விசாரிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னை புழல் சிறையில் பேராசிரியை நிர்மலாதேவி அடைக்கப்பட்டுள்ளார். குரல் மாதிரி சோதனைக்காக அழைத்து வரப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மதுரை சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications