குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் இலவசப் பொருள் தரப் போறாங்க அம்மா.. நிர்மலா போடும் குண்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள இலவசப் பொருட்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கப் போவதாக அதிமுக மேடைப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகப் பிரமாண்டமான அளவில் இலவசத் திட்டங்களை மாற்றிய பெருமை திமுகவுக்கே. 2006 இலவச கலர் டிவி என்ற இலவசத்தை மாயாஜாலமாக மாற்றி ஆட்சியையே பிடித்த கட்சி திமுக. இதைத் தொடர்ந்து அதிமுகவும் கடந்த 2011 தேர்தலில் இலவசப் பொருட்களை வாரியிறைத்து ஆட்சியைப் பிடித்தது.

இந்த நிலையில் இந்தத் தேர்தலிலும் இலவசங்கள் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு விதமான வெறுப்பு வந்து விட்டதால் இலவசங்கள் விஷயத்தில் திமுக அடக்கி வாசித்துள்ளது. அதேசமயம், அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

ரிவிஷன் நடக்குதாம்

ரிவிஷன் நடக்குதாம்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை முன்பே தயாராகி விட்டபோதிலும் அதை ரிலீஸ் செய்வதற்குள் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி அலையைப் பரப்பி விட்டதால் தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையை திருத்திக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.

234 தொகுதிகளுக்கும் தனித் தனியாக

234 தொகுதிகளுக்கும் தனித் தனியாக

அதேபோல 234 தொகுதிகளுக்கும் தனித் தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதால்தான் தாமதம் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

நிர்மலா போட்ட குண்டு

நிர்மலா போட்ட குண்டு

இந்த நிலையில் அதிமுக மேடைப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஒரு குண்டைப் போட்டு விட்டுப் போயுள்ளார்

சேலம் கூட்டத்தில்

சேலம் கூட்டத்தில்

சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நிர்மலா பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர், இடைப்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை கொடுத்து விட்டார். இன்னும் என்ன தேவை இருக்கிறது. குளிர்சாதனப் பெட்டி, வாஷிங்மிஷின் போன்றவை தான்.

ஒரு லட்சம் இலவசப் பொருட்கள்

ஒரு லட்சம் இலவசப் பொருட்கள்

அதையும் அம்மா கொடுப்பார். அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசங்கள் அறிவிக்கப்படலாம் என்றார் அவர்.

ஒருவருக்கு 2 குடும்பம் இருந்தால்!

ஒருவருக்கு 2 குடும்பம் இருந்தால்!

நிர்மலாவின் இந்தப் பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துக்கு ஒரு லட்சம் என்றால் மாநில கஜானா கண்டமாகி விடும் என்று மட்டும் தெரிகிறது.

ஒரு டவுட்டு... ஒருவருக்கு 2 - 3 குடும்பம் இருந்தால் எப்படிக் கொடுப்பாங்க.. ??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+