அது திராவிட முன்னேற்ற கழகம் கிடையாது! டிரக்ஸ் முன்னேற்ற கழகம்.. நிர்மலா சீதாராமன் காட்டமான விமர்சனம்
அவினாசி: தமிழகத்தில் தங்கள் சுயநலத்திற்காக போதைப் பொருட்கள் மற்றும் அது விற்பனை செய்யும் டிரக்ஸ் முன்னேற்றக் கழகம் எனப்படும் திமுகவை விரட்டி அடிக்க தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகனை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார்.

அவர் பேசுகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நலத்திட்டங்கள் வருமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் இன்று நமக்கும் வரும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. ஏழை மக்களுக்கு கழிப்பறை, கான்கிரீட் வீடு உள்ளிட்டவைகளை தமிழகத்தில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரதமர் மோடி கட்டிக் கொடுத்துள்ளார்.
சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு திட்டம் தீட்டி குழுவுக்கே பணம் கொடுத்து உதவியுள்ளோம். ஓட்டு போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் கழிவறைகளை பிரதமர் மோடி கட்டிக் கொடுத்தார். "குடும்ப அரசியல் என்று என்னை திட்ட வேண்டாம். ஆனால் மக்கள் ஆதரவு தருகிறார்கள். அது தவறில்லை" என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஆனால் பிரதமர் மோடியோ நாடு முழுவதும் உள்ள மக்கள்தான் எனது குடும்பம் , எனக் கூறி வருகிறார். பெண்கள் தன் மானத்தோடு கையில் லட்ச ரூபாய் வருமானம் வரும் வகையில் மோடி ஐயா திட்டம் வைத்துள்ளார். காய்கறி விற்கும் , சிறு வியாபாரம் செய்யும் பெண்களுக்கு மானியத்தோடு வட்டி விகிதம் குறைத்து கடன் கிடைக்கிறது.
ஆனால் மாநில அரசு பெண்களை எப்படி நடத்துகிறது? 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வென்றால் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ 1000 உரிமை தொகை கொடுக்கிறேன் என உறுதியளித்துவிட்டு, பின்னர் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் ரூ 1000 என நாடகம் நடிக்கின்றனர்.
பெண்களை அவமதிக்கும் செயலை பிரதமர் மோடி செய்யமாட்டார் . சென்னையில் மேயர் எவ்வளவு சிரமப்படுகிறார் என நாம் வீடியோக்களில் பார்க்க முடிகிறது. தங்களுடைய சுயநலத்திற்காக மதுவை விற்போம். போதை பொருள் விற்போம். சினிமா தயாரிப்போம் என குடும்ப நலனை மட்டுமே நினைத்து செயல்படுவோருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
DMK- டிரக்ஸ் முன்னேற்ற கழகத்தை விரட்டுவோம். இதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரி தொகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து எல். முருகனை வெற்றி பெறச் செய்து உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என பேசினார்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications