தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, நிர்மலா சீதாராமன் இன்று பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்கிறார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், இன்று திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை, சைதாப்பேட்டையில் தேர்தல் பேரணியில் பங்கேற்கும் நிர்மலா சீதாராமன், பின், மதுரை, மெகோ அரங்கில் மதியம், 1:30 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அவர், மாலை, 6:30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய இடங்களில் ஓட்டு சேகரிக்கிறார். பின், சேலம் மாவட்டம், கெங்கவல்லி மற்றும் வாழப்பாடியில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications