For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடுதிப்பென தமிழகத்தில் தலித் கிராமத்தில் நிர்மலா சீதாராமன் 'டேரா;.. தலித் வீட்டில் சாப்பாடு.. ஏன்?

நிர்மலா சீதாராமன் திடீரென தமிழகத்தில் தலித் கிராமங்களில் தங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் தலித் கிராமங்களில் தங்கும் நிர்மலா சீதாராமன்- வீடியோ

    ராமநாதபுரம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென தமிழகத்தில் தலித் கிராமங்களில் தங்கி, சாப்பிட்டு மத்திய அரசு நலத் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பிறந்தவராக இருந்தாலும் ஆந்திராவில் செட்டிலானவர் நிர்மலா சீதாராமன். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    Nirmala Sitharaman Visits Dalit Houses

    அதனால் காவிரி நதிநீர் பிரச்சனையில் தன்னை ஒரு கன்னடராகவே நினைத்துக் கொண்டு கர்நாடகா எம்.பி.க்களுடன் இணைந்து செயல்படுகிறவர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொன்னதால் தமிழகத்தில் நேற்று கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டவர் நிர்மலா.

    இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்தார். பின்னர் கலையூர் தலித் கிராமத்தில் இரவு தங்கினார்.

    பாஜகவின் மாநில செயலர் பால கணபதி வீட்டில் இரவு உணவு அருந்தினார். இன்று விருதுநகர் மாவடம் பாஜகவின் எஸ்சி மோர்ச்சாவைச் சேர்ந்த முருகன் வீட்டில் மதிய உணவு அருந்தினார்.

    இவை தொடர்பான புகைப்படங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் இடைவிடாமல் நிர்மலா சீதாராமன் பதிவிட்டு வருகிறார். நிர்மலா சீதாராமனின் இந்த திடீர் டேரா ஏற்கனவே காற்றில் பரவும் பல செய்திகளை உறுதி செய்வதாகவே இருக்கிறது.

    தமிழகத்தின் பல பிரச்சனைகளில் மத்திய அரசின் பிரதிநிதியாக நிர்மலா சீதாரமன்தான் அனுப்பப்படுகிறார். இதனால் பாஜகவின் மேலிட பொறுப்பாளர் அல்லது தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமன் முன்னிறுத்தப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இதைத்தான் உறுதி செய்வதாக உள்ளது நிர்மலா சீதாராமனின் தமிழக விசிட்.

    English summary
    Union Defence Minister Nirmala Sitharaman visited Dalit Villages in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X