ராப்.. ராக்கை தூக்கி போடுங்க.. நித்தியானந்தாவின் இந்த பாட்டை கேளுங்க!
இணையத்தில் நித்யானந்தாவின் பாடல் வைரலாகி வருகிறது.
சென்னை: பேட்ட ராப்... ராக் மியூசிக்... சூப்பர் ஹீரோக்களின் மாஸ் எண்டரி சாங்.. என எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது ஒரு பாடல்! அது நம்ம நித்தியானந்தா பற்றின பாடல்தான்!
இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. உள்ளே சென்று பார்த்தால், நித்யானந்தா கம்பீரமான தோற்றத்துடன், ஒற்றை ஆளாக நின்று கொண்டிருக்கிறார். முகத்தில் அதே ட்ரேட் மார்க் சிரிப்பு! பாட்டு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு புதுசு - ஒரு தினுசு
யார் சொன்னார்கள் பக்தி பாடல்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று! ஸ்லோகங்கள், மந்திரங்கள் என தெய்வ தரிசனத்துடன் கூடிய பஜனை பாடல்களை கேட்ட நமக்கு நித்யானந்தா பாடல் புதுசாக மட்டும் இல்லை.. ஒரு தினுசாகவே உள்ளது.

ட்ரேட் மார்க் சிரிப்பு
இந்த பாடலை எதில் சேர்த்து கொள்வது என்றே தெரியவில்லை. ஆங்கில பாடல் நெடியில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் வந்து விழுகிறது. விழும் அத்தனை வார்த்தைகளிலும் நித்யானந்தா புகழே! பக்தர்கள்... சாரி... சாரி... பக்தைகள் இந்த பாடலை பாட பாட, நித்யானந்தா சிரித்தமேனிக்கு நின்று கொண்டே இருக்கிறார். பாடல் முடியும்வரை ஒரே போஸ்தான்!!

தாறுமாறாக ஓடுகிறது
சாமியார் நித்யானந்தாவின் இந்த வீடியோ பாடலில் சும்மா கிராபிக்ஸ் பூந்து விளையாடியிருக்கு. திடீர் திடீரென்று அவரது கையை ஆசி வழங்குவதுபோல மேலே தூக்குகிறார். அப்போது கையிலிருந்து புகை வெளியேறுகிறது. இந்த உலகையே ஆளக்கூடியவர் என்ற வரிகள் வருகிறது. அதற்கு நித்யானந்தாவுக்கு பின்னால் பூமி சுழல்கிறது, நிலங்கள் தாறுமாறாக ஓடுகின்றன!!

கண்ணை திறந்து மூடுகிறார்
அதற்கு மேல் படுவேகமாக இருக்கிறது பாட்டு. அவ்வப்போது திடீர் திடீரென கண்ணை திறந்து திறந்து மூடுகிறார் நித்யா. ஆனால் அது ஏன் என்றுதான் தெரியவில்லை. காடுகள், மலைகள் என்று தவமிருந்த நம் யோகிகள், முனிவர்களுக்கு நடுவில் டிஜிட்டல் சாமியார் நித்யாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications