5 மீனவர்களை மீட்க சட்ட நடவடிக்கை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
ராமேஸ்வரம்: இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திரக் கால்வாய் வழித் தடங்களை மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேரில் ஆய்வு செய்த பின்னர் செவ்வாய்கிழமை மண்டபத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது வேதனைக்குரியது. மீனவர்களையும் மீட்க வெளியுறத்துறை மூலம் கொழும்பில் உள்ள இந்திய தூதர் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றத்தில் இருந்து மீனவர்கள் சிறைப்பிடிப்பதும் விசைப் படகுகளை கைப்பற்றுவதும் அதிகமாகியுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியும், சுஷ்மா ஸ்வராஜும் இலங்கை அதிபரிடம் பேசி வருகிறனர்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications