புதிய ஊதிய ஒப்பந்தம்...என்.எல்.சி. தொழிலாளர்களின் 39 நாள் ஸ்டிரைக் தற்காலிகமாக 'வாபஸ்'
நெய்வேலி: புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் கடந்த 39 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு 2012ஆம் ஆண்டு புதிய ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் கடந்த மாதம் என்.எல்.சி. நிறுவன நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுடன் ஒப்பந்த தொழிலாளர்களும் கை கோர்த்தனர்.
மேலும் என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா 2 முறை கடிதங்கள் எழுதியிருந்தார்.
அத்துடன் அ.தி.மு.க.வின் 44 எம்.பி.க்களும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
கடந்த 39 நாட்களாக நடைபெற்ற இப்போராட்டத்தின் இடையே பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று நெய்வேலியில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தற்போதைய போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணி முதல் அனைத்துத் தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications