அதிமுக பச்சை கொடி காட்டினால் அதற்கும் கருப்பு கொடி காட்டுவோம்- சீமான் பொளேர்!
பிரதமர் பச்சைக்கொடி காட்டினால் அதற்கும் சேர்த்து கருப்புக்கொடி காட்டுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டி அழுத்தம் தந்தால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். அதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய சீமான், பச்சைக்கும் சேர்த்து கருப்புக்கொடி காட்டுவோம் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவின் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புகளை இன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் நலப் பேரியக்கம் மு.களஞ்சியம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது பேசிய சீமான், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகமிழைத்தும், திட்டமிட்டு கர்நாடகத் தேர்தலுக்காக மத்திய அரசு கள்ளமௌனம் சாதித்து வருகிறது.
பன்னெடுங்காலமாக இந்திய அரசால் வஞ்சகம் செய்யப்பட்டு அதன்மூலம் தமிழக நிலவியல் மீது போர் தொடுக்கப்பட்டு இருப்பதன் விளைவாகத் தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரியும் மிகப்பெரும் போராட்டங்கள் வெடித்து தமிழர் நிலமே போர்க்கோலம் பூண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் வரும் பிரதமருக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என்று அமைச்சர் சொல்கிறார். அங்கேயும் நாங்கள் கறுப்புக்கொடி காட்டுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications