திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி- முக.ஸ்டாலின்
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சிதான் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க., பொருளாளர் மு.க.,ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அவருக்கு, தமிழக எல்லையான களியக்காவிளையில், காலை 10:00 மணிக்கு, குமரி மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்சியில் ஸ்டாலின் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது: தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்ய வேண்டாம் கடந்த 9 மாதத்திற்கு முன்பே கூட்டணி முறிந்துவிட்டது.

அரசியல் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒரு மரபு. தேர்தல் கூட்டணி அமைவதற்கும் அதற்கும் தொடர்பில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பது திமுகப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. இதுகுறித்து தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை எடுத்து உரைத்து இருக்கிறார்.
அதேசமயம் தற்போதுள்ள கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணி தொடரும். கூட்டணியில் மேலும் பல புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார். எதிர்வரும் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சிதான். தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணிகள் குறித்து தெரியவரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று திமுக பொதுக்குழுவின் கருணாநிதி அறிவித்தார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
இதனால் திமுக உடன் காங்கிரஸ் நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று உறுதிபடக்கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications