ஜெ. ஆட்சி வர வேண்டும் என்கிறார், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிறார்.. பொன். ரா பேச்சு புரியலையே!
சென்னை: அதிமுக, திமுக இரண்டையும் தோற்கடிக்கவே விரும்புகிறோம். வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு, பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து அதிமுக பாஜக இடையே கூட்டணி முடிவாகிவிட்டது என பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் கூறிவருகின்றனர்.

இந்தநிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன்,
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாகும். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா விடுதலையானது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். சில தலைவர்கள் கற்பனையான வாதங்களை வைத்து மத்திய அரசு மீது பழிபோட்டு பிரச்சினையை திசை திருப்ப முயல்கின்றனர். அது எடுபடாது.
நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை. இனியும் தலையிடாது. அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவே வலிமையான தலைவர். முதல்வர் பதவிக்கான துணிச்சலும், திறமையும் அவருக்கு உள்ளது. அவர் முதல்வரானால் அரசு நிர்வாகம் சிறப்பாக நடைபெறும். வளர்ச்சித் திட்டங்கள் வேகம் எடுக்கும். இப்போது வழக்கிலிருந்தும் அவர் விடுதலையாகியுள்ளார். எனவே, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரிக்கைவிடுத்தேன். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. திமுகவாக இருந்தால் கலைஞர் முதல்வராக வேண்டும் என கோரிக்கைவிடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
பாஜகவைப் பொறுத்தவரை அதிமுக, திமுக இரண்டையும் தோற்கடிக்கவே விரும்புகிறோம். வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!











Click it and Unblock the Notifications