உன்னத பெண்மணி, தமிழகத்தின் கண்மணி 'அம்மா' உடல்நிலை பாதிப்பால் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை:டி.ஆர்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அக்டோபர் 3-ந் தேதியன்று தாம் பிறந்த நாள் கொண்டாடவில்லை என்று லட்சிய திமுக நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் அக்டோபர் 3-ந் தேதி என் பிறந்த நாள் வருகிறது. ஒரு காலகட்டத்தில் என் பிறந்த நாளை பல ஏழையருக்கு உதவும் நாளாக கொண்டாடி கொண்டிருந்தேன். ஆனால் கொஞ்சங்காலமாக நான் என் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை.

அதிகாரம், அந்தஸ்து...
காரணம் பெரிதாக நான் ஏதும் சாதனைகள் நிகழ்த்தியதாக நினைக்கவில்லை. என்னை பெரிய அதிகாரத்தில் அந்தஸ்தில் இருப்பவனாக கருதவில்லை. ஆனால் என் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக் கொண்டு அன்று என்னை வந்து சந்திக்கும் லட்சிய திமுக தொண்டர்களையும் என் ரசிகர்களையும் அபிமானிகளையும் சந்திக்காமல் தவிர்த்தது இல்லை.

அம்மாவுக்காக...
ஆனால் இந்த முறை காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்காமல் உச்சநீதிமன்றம் வரை உரிமைக்குரல் எழுப்பிய உன்னத பெண்மணியாக உழலும் தமிழகத்தின் கண்மணியாக தமிழக முதல்வர் அதிமுக தலைவி அம்மா அவர்களைப் பார்க்கிறேன். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் என் பிறந்த நாளன்று வழக்கமாக நான் சந்திக்கும் என் ரசிகர்களைக் கூட சந்திக்கும் மனநிலை எனக்கில்லை. நான் பிறந்த தஞ்சை தரணி காவிரி நீருக்காக திண்டாடும் போது மனம் பிறந்த நாள் கொண்டாடுமா?

தண்ணீரும் கண்ணீரும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி உச்சநீதிமன்றம் வரை உன்னத குரலை உயர்த்திய தமிழக முதல்வர் அம்மாவின் முயற்சியால்தான் காவிரியில் கொஞ்சமாவது வந்து கொண்டிருக்கிறது தண்ணீர்... இந்த நிலையில் அம்மா அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை நினைத்தால் உண்மைத் தமிழர்கள் நெஞ்சம் வடிக்கிறது கண்ணீர்...

பிரார்த்தனையும் துணையும்
தமிழகத்தின் உண்மை நல விரும்பிகள் யாராக இருந்தாலும் அம்மா பூரண குணம் அடைந்து மக்கள் நல பணியாற்ற திரும்ப வேண்டுமென எல்லா வல்ல இறைவனிடம் செய்வோம் பிரார்த்தனை.. என்றுமே நல்லோருக்கு இறைவன்தான் துணை.
இவ்வாறு டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications