அங்கிருந்து 10 எம்எல்ஏக்கள் வர்றாங்க.. ஓபிஎஸ் காணாமல் போயிருவார்.. நாஞ்சில் சம்பத் ஹேப்பி!
ஓபிஎஸ் அணியில் இருந்து 10 எம்எல்ஏக்கள் தினகரன் அணிக்கு வரத் தயாராக இருப்பதால் இரண்டு அணிகளும் சேருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சேலம்: அதிமுகவின் பிளவு பட்டுள்ள இரண்டு அணிகளும் சேருவதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக அம்மா அணியின் தலைமை கழகச் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக அம்மா அணி சார்பில் மே தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
ஓபிஎஸ்ஸை முதல்வராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. டீக்கடை வைத்திருந்த அவருக்கு கட்சியில் பல்வேறு பொறுப்புக்களை கொடுத்தார். ஆனால் இன்று அவரால் இந்த நாடு பாடாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

சேராது
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்களில் 10 பேர் இந்தப் பக்கம் வரத் தயாராக உள்ளனர். விரைவில் அவர்கள் பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்க உள்ளனர். அதனால் ஓபிஎஸ் அணி விரைவில் காணாமல் போகும். அதனால் இரண்டு அணிகளும் சேரும் வாய்ப்பு 100 சதவீதம் இல்லை.

துரோகம்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எந்தவிதக் கேள்வியும் கேட்காமல் முதல்வராக இருந்த ஓபிஎஸ், பதவி பறிபோனதும் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று பேசி வருகிறார். இது அதிமுகவிற்கு இழைக்கப்படும் துரோகம்.

இயற்கை மரணம்
ஜெயலலிதா உடல்நலம் குன்றி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் முழுவதும் குழாய்கள் பொருத்தி சிகிச்சை பெற்றார். இதய அடைப்பு ஏற்பட்டதால் தான் அவர் உயிர் இழந்தார்.

மீண்டு வருவார்
ஜெயலலிதா உயிரைக் காக்க, தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர் தற்போது சிறையில் உள்ளார். அதிமுகவை வழி நடத்த சசிகலாவால்தான் முடியும். அவர் விரைவில் மீண்டு வருவார். கட்சியைப் பிடிப்பார் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications