அதெல்லாம் அமைச்சரவையில் எந்த மாற்றமும் கிடையாது.. எடப்பாடி பொளேர் முடிவு!
தமிழக அமைச்சரவையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழக அமைச்சரவையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 31 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் அதிருப்தி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
தொகுதி பிரச்சினைகள் பற்றி அவர்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டாலும் உண்மையில் அவர்கள் தங்களுக்கு முக்கிய பதவி கேட்டே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கடிகள் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

35 அமைச்சர்கள்
அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேரை அமைச்சர்களாக நியமனம் செய்யலாம். அந்த அடிப்படையில் தமிழக அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும்.

சிலருக்கு வாய்ப்பு
எனவே மேலும் 4 பேரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள முடியும். ஆகையால் தமிழக அமைச்சரவையில் மேலும் சிலருக்கு வாய்ப்பு அளிக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

புதிய அமைச்சர்கள்
ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நீக்கவும், அதிருப்தியாளர்களை சமரசம் செய்யவும் 3 பேர் அமைச்சர்களாக சேர்க்கப்பட உள்ளனர். விரைவில் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று தகவல் வெளியானது.

மாற்றமில்லை
தங்கத்தமிழ் செல்வன் நிதியமைச்சராக நியமனம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், தற்போதைக்கு அமைச்சரவை மாற்றமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இணைப்பு பேச்சுவார்த்தை
அதிமுகவின் இரு அணிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஒருவேளை இணைப்பு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கட்சியில் பதவி
3 மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் இருப்பதால் அவர்களுக்கு கட்சி நிர்வாகத்தில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications