நானே முதல்வர் வேட்பாளர்... பா.ம.க. தலைமையிலேயே கூட்டணி என்பதில் சமரசமே கிடையாது: அன்புமணி 'கறார்'
சென்னை: "தாமே முதல்வர் வேட்பாளர்; பா.ம.க.வே தலைமை" என்பதை ஏற்கும் தி.மு.க; அ.தி.மு.க. அல்லாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் எந்த ஒரு சமரசமுமே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தினமணி நாளேட்டுக்கு அன்புமணி நேற்று அளித்த பேட்டி ஒன்றில், மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் எப்படி உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்விக்கு, "கூட்டணி என்று ஏற்படும்போது அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. திமுக, அதிமுகவுக்கு மாற்று ஏற்படுத்துவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்" எனக் கூறியதாக இடம்பெற்றிருந்தது.

இதனால் பா.ம.க. தன்னுடைய முதல்வர் வேட்பாளர் நிலைப்பாட்டில் இருந்து சமரசம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை அன்புமணி திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"கூட்டணி என்று ஏற்படும்போது அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. திமுக, அதிமுகவுக்கு மாற்று ஏற்படுத்துவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம் என தெரிவித்திருந்ததாக" தினமணி பேட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது முற்றிலும் தவறானது.
"பேசித் தீர்த்துக் கொள்ளலாம்' எனக் குறிப்பிட்டது எதை? முதல்வர் வேட்பாளர் குறித்த வினாவுக்கு நான் விடையளித்தபோது, இரு விஷயங்களில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தயாராக இல்லை.
முதலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.
இரண்டாவதாக, முதல்வர் வேட்பாளராக கட்சித் தலைமை என்னை ஒருமனதாக ஏற்கெனவே அறிவித்து, கடந்த 10 மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவரும் நிலையில், அதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள முடியாது.
அதே நேரத்தில் துணை முதல்வர் பதவி, கூட்டணி ஆட்சி ஆகியவற்றுக்கு பாமக தயாராக இருக்கிறது. இது பற்றியெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நான் குறிப்பிட்டேன்.
கூட்டணிக்கு நிபந்தனை என்ன? பாமகவின் தலைமையையும், அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக் கொள்ளும் அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம் என்று ராமதாஸ் பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதான் பாமகவின் உறுதியான நிலைப்பாடு. இதில் எவ்வித மாற்றத்துக்கும், சமரசத்துக்கும் இடமில்லை என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications