குழந்தையில்லாத விரக்தி... வேலூரில் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை
வேலூர்: வேலூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்-ப்ரியா தம்பதி. இவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ப்ரியாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ப்ரியாவுகுக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளாராம். இதனால் விரக்தியில் இருந்த வெங்கடேஷ், ப்ரியா ஆகிய இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு இவர்கள் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்.
இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தான், வெங்கடேஷ், ப்ரியா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தை இல்லாததாலேயே இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications