மக்கள் நலக்கூட்டணியில் குழப்பமோ, பிரச்சனையோ இல்லை: வைகோ
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் ஒரு குழப்பமும் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு கிளம்பியபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் கலந்து பேசி தான் 3 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டோம். கூட்டணி கட்சிகளின் கருத்துகளை கேட்ட பிறகே தேர்தலை புறக்கணிக்கும் அறிவிப்பை வெளியிட்டேன்.
நான் ஏதோ தன்னிச்சையாக அறிவித்ததாக சில பத்திரிகைகளில் வெளியான செய்திகளை கூட்டணி கட்சியினர் மறுத்துள்ளனர். போட்டியிடவில்லை என்பதற்கும், தேர்தலை புறக்கணிக்கிறோம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்பதே எங்கள் முடிவு. நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம். புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து செயல்படுவதால் தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பின்பற்ற மாட்டோம் என அது ஏற்கனவே அறிவித்தது.
அதனாலேயே புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை.
மதிமுக புதுச்சேரி தேர்தலை புறக்கணிக்கிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications