சமையல் எரிவாயு இணைப்பு பெற நோ டெபாசிட்! வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சலுகை
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு டெபாசிட் இன்றி எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு டெபாசிட் இன்றி எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை போல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் பெற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு டெபாசிட் இன்றி எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு இணைப்பு தொடர்பாக புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புதுச்சேரியை மண்ணெண்ணெய் இல்லா பகுதியாக மாற்றும் நடவடிக்கையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications