தினகரன் திடீர் பல்டி.. தனிக்கட்சி துவங்கவில்லை என அறிவிப்பு
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று டி.டி.வி தினகரன் அறிவித்து உள்ளார்.
நீலகிரி: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று டி.டி.வி தினகரன் அறிவித்து உள்ளார். மேலும், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியையும் நீதிமன்றம் சென்று மீட்போம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் நேற்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று டி.டி.வி தினகரன் தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்தார். மேலும், இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் நீதிமன்றம் சென்று மீட்போம் என்றும் டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை உள்ளது. அதை சமாளிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications