அண்ணா தி.மு.க.வுக்கு தாவலா? தி.முகவின் பழனிமாணிக்கம், ரகுபதி மறுப்பு!
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் பழனிமாணிக்கம், புதுக்கோட்டை ரகுபதி ஆகியோர் தி.மு.க.வில்தான் தொடர்ந்து நீடிக்கப் போவதாக விளக்கம் அளித்துள்ளனர்.
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான பழனிமாணிக்கம், புதுக்கோட்டை ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை கருப்பசாமி பாண்டியன் மற்றும் முல்லைவேந்தன் ஆகியோர் அண்ணா தி.மு.க.வில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இது தொடர்பாக பழனி மாணிக்கம் மற்றும் புதுக்கோட்டை ரகுபதி தரப்பில் நாம் விளக்கம் கேட்டோம். இதற்கு பதிலளித்துள்ள பழனிமாணிக்கம், தி.மு.க.வில் மரியாதை கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பது பிரச்சனையே இல்லை. தற்போது உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பதவி கொடுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் தி.மு.க.வில் நான் எப்படி நடத்தப்பட்டாலும் சாகும்வரை கட்சியில்தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் புதுக்கோட்டை ரகுபதி தமது ஆதரவாளர்களிடம், அண்ணா தி.மு.க.வுக்கு போனால் என்ன மாதிரியான மரியாதை கிடைக்கும் என்பது தெரிந்த கதைதான்.. தி.மு.க.வில் கிடைக்கிற மரியாதையை வைத்துக் கொண்டு இங்கேயே இருந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தி.மு.க. தலைமையால் உட்கட்சி பூசலால் கட்சியில் நீக்கப்பட்டிருக்கும் முல்லைவேந்தனோ, தாம் சென்னையில்தான் இருக்கிறேன்;.... ஆனால் போயஸ்தோட்டத்துக்குப் போகவில்லை என்று பட்டும் படாமலும் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications