கோயம்பேட்டில் பெங்களூர் செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் 2–வது நாளாக நிறுத்தம்- பலத்த பாதுகாப்பு!
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக அரசு பேருந்துகள் தொடர்ந்து 2-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பேருந்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கடந்த 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் நேற்று முன்தினம் மாலை மதுரவாயல் அருகே சென்று கொண்டு இருந்த கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் பெங்களூருக்கு செல்லும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 2வது நாளாக நேற்றும் கர்நாடகாவுக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, பெங்களூருக்கு செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த கர்நாடக அரசு பேருந்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications