கட்டிக் கட்டியாக தங்கம் பதுக்கிய சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. ராம்மோகன் ராவ்
கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்கத்தை பதுக்கிய சேகர் ரெட்டிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.
சென்னை: சேகர் ரெட்டி வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை செய்த போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ராம்மோகன் ராவ் வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள் என்று கூறப்பட்ட நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அதனை மறுத்துள்ளார்.
சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையிலேயே முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் ஒரே நாளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், ராம்மோகன் ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் சேகர் ரெட்டிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் அரசியல் சாசனத்திற்கு எதிரான தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, சேகர் ரெட்டிக்கு பல்வேறு விதமான வகையில் அரசு ஒப்பந்தங்களை கோடிக்கணக்கில் கிடைக்க ராம்மோகன் ராவ் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், ராம்மோகன் ராவின் மகன் விவேக் நடத்தும் நிறுவனங்களுக்கு பல்வேறு வகையில் சேகர் ரெட்டியின் நெருக்கத்தை பயன்படுத்தி முதலீடுகள் பெறப்பட்டன என்றும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் ராம்மோகன் ராவ் இதனை மறுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications