‛உறவினரை திருமணம் செய்யாதீங்க''.. தென்காசியில் நூதன பிரசாரம்.. களமிறங்கிய ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு.. பின்னணி
தென்காசி: ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு வழிக்காட்டுதலின்படி தென்காசி மாவட்டத்தில் ‛உறவில் திருமணம் வேண்டாம்' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடு வீடாக செல்லும் பெண்கள், ரத்த உறவுகளை திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறி காலண்டர் வழங்கி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி உலகளவில் முன்னணி ஐடி நிறுவனமாக ஜோஹோ செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசியில் ஜோஹோ நிறுவனம் உள்ளது.

ஜோஹோ நிறுவவனரான ஸ்ரீதர் வேம்பு தென்காசி மாவட்டம் மத்தளம்பாறைஅருகே உள்ள ஐடி நிறுவனத்தின் அருகே கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தான் ‛உறவில் திருமணம் வேண்டாம்' என்ற பிரசாரம் தென்காசியில் தொடங்கி உள்ளது. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வழிக்காட்டுதலின்பேரில் தென்காசி மாவட்டம் பாஜக மாநில தலைவரும், வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேஷனின் தலைவருமான ஆனந்த் அய்யாசாமி தலைமையில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி வீடு வீடாக பெண்கள் சென்று ‛உறவில் திருமணம் வேண்டாம்' என்ற வாசகத்துடன் கூடிய காலண்டரை வழங்கி பிரசாரம் செய்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோவுக்கு ஸ்ரீதர் வேம்பு ஆதரவு அளித்துள்ளார். இதுபற்றி அவர் இன்று, ‛‛ தென்காசி வாய்ஸ் ஆஃப் பவுண்டேஷனுடன் இணைந்து ரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்களை தடுக்க தென்காசியில் தொடங்கி தமி்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் பரவும் ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை நாங்கள் தமிழில் மேற்கொண்டுள்ளோம். இதன் செய்தி உறவில் திருமணம் வேண்டாம் என்பது தான். இந்த செய்தியை பரப்ப வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
In association with the Voice of Tenkasi Foundation, we have taken up a campaign in Tamil to discourage cousin marriages, starting in Tenkasi and spreading to other districts of Tamil Nadu.
— Sridhar Vembu (@svembu) January 25, 2026
The message is simple: உறவில் திருமணம் வேண்டாம் (no marriage among blood relatives).… https://t.co/z8zVZsJoue
அதேபோல் இன்னொரு பதிவில், ‛‛நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்து கொண்டால் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மரபணு சார்ந்த பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படும். பிறவியிலேயே உடல் உறுப்பு குறைநபாடுகள் அறிவவுசார்ந்த மற்றும் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுதல், இதயம் மற்றும் நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்படுத்தல, சிசு மரணம் மற்றும் நீண்டகால மருத்துவ பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது'' என்றும் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
இந்த பிரசாரத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் இது கட்டுக்கதை என்று கூறி வருகின்றனர். இதனால் ஸ்ரீதர் வேம்புவின் பதிவின் கமெண்ட்டில் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த பிரசாரம் விவாதத்தை கிளப்பி உள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications