"இவருக்குப் பதில் இனி இவர்"… டிவி 'சீரியல்' பாணியில் பதிலளித்த விஜயகாந்த்!!
சேலம்: மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில்லை எனத் தெரிவித்துள்ளார் பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி மூலம் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். நேற்றைய நிகழ்ச்சி சேலத்தில் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
விஜயகாந்த் மண்டபத்துக்குள் நுழைந்ததும் அதன் நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் கேட்ட கேள்விக்கு விஜயகாந்த் பதில் அளித்தார்.
நேற்றைய நிகழ்ச்சியில், சேலம் மாநகர் மாவட்டம், கிழக்கு, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது ஒரு தொண்டர் விஜயகாந்திடம் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என வினா எழுப்பினார். அதற்கு விஜயகாந்த் அளித்த பதிலாவது :-

உடல்நலமில்லை...
உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நீண்ட நேரம் பேச முடியாது. இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகிறேன்.

சினிமா வாரிசு...
சினிமாவில் நடித்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இனிமேல் சினமாவில் நடிக்க ஆசை இல்லை. எனக்கு பதில் எனது மகன் சினிமாவில் நடிக்கிறார்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புகைப்படம்...
கேள்வி பதில் நிகழ்ச்சிக்குப் பின்னர், தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த்.

சட்டசபைத் தேர்தல்...
அப்போது 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே தீவிரமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார் விஜயகாந்த்.

சுற்றுப்பயணம்...
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-
நான் தொண்டர்களை சந்திக்க ஆசைப்பட்டேன். அதற்காக ஒவ்வொரு மாவட்டமும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

அடமானம்...
தே.மு.தி.க.வை அடமானம் வைத்து விடுவேன் என்று சிலர் கூறுகிறார்கள். கட்சியில் உள்ள ஒரு தொண்டனை கூட அடமானம் வைக்க மாட்டேன்.

புதிய உறுப்பினர்கள்...
2016-ல் தே.மு.தி.க. மாபெரும் சக்தியாக விளங்கும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதந்தோறும் 1000 புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications