வெள்ள பாதிப்பு எதிரொலி: சென்னை ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து!
சென்னை: மழை, வெள்ளத்தால் மக்கள் துயருற்ற நிலையில், சென்னையில் உள்ள தங்கள் ஹோட்டல்களில் புத்தாண்டையொட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்களை இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பருவமழையின்போது ஏற்பட்ட திடீர் பெரு மழை மற்றும் ஏரி நீர் திறந்துவிடப்பட்டதில் நிலவிய குழறுபடி போன்றவற்றால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சென்னை மாநகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பில் இருந்து பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. எனவே இந்தாண்டு நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்திலுள்ள நிலையில், இந்தாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடத்தப்போவதில்லை என நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை சென்னை மாநகர போலீசாரும் உறுதி செய்துள்ளனர். நடன விருந்து போன்ற கொண்டாட்டங்கள் நடத்த அனுமதி கேட்டு நட்சத்திர ஹோட்டல்கள் சார்பில் எந்த மனுவும் அளிக்கபப்டவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை தொழிலதிபர்கள் பலர் பெங்களூர் அல்லது கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். பெங்களூரில் இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications