அறப்போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை - கமல்
இளைஞர்கள் போராட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த கவன ஈர்ப்பை பெறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரியும், மத்திய அரசு அவசர சட்டம் நிறைவேற்றக் கோரியும் மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். சென்னை தொடங்கி நெல்லை வரை பட்டி தொட்டி எங்கும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இளைஞர்கள் ஒன்றுக்கூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகர்கள் நேரடியாக சென்றும், டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டும், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இப்போராட்டம் தொடர்பாக கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "குரல் கொடுக்க வேண்டிய கடமையை மாணவர்கள் கையில் எடுத்துள்ளார்கள். அது அவர்களின் குரலாக இருக்க வேண்டும்.
முதல் முறையாக பெருமைப்படும் அளவுக்கு நல்ல முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஒட வைத்திருக்கிறார்கள்.
இதில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கிறேன். இது அவர்களுடையப் போராட்டம். நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும். ஆகவே அவர்களை மிரட்டக் கூடாது. அறப்போராட்டத்தில் ஈடுபடும் அவர்களை தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை" என்று தெரிவித்துள்ளார் கமல்.
கடந்த சில வாரங்களாகவே கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications