"இந்தி" இசையா.? எனக்கு கெட்ட கோபம் வந்திடும்.! பிரஸ் மீட்டில் திடீரென ஆவேசமான தமிழிசை! என்ன மேட்டர்
ராணிப்பேட்டை: திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க திமுக அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனச் சாடினார். மேலும், டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டையும் எழுப்பிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் மிகக் கடுமையாகச் சாடினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் திருக்கோவிலில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்
அவர் மேலும் பேசுகையில், "தமிழக அரசின் செயல்பாடுகள் கவலையளிக்கிறது.. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திருச்செந்தூரில் பக்தர் ஒருவர் உயிரிழந்திருந்தார். அறநிலையத்துறை கோவில்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அமைச்சர் சேகர்பாபு முருகனின் அருள் எங்களுக்கு உள்ளது எனக் கூறுகிறார். முருகர் அருள் இருக்கிறது என்றால் முதல்வர் ஏன் கோவிலுக்குப் போவதில்லை.
இப்தார் நோன்புக்கு முதல்வர் போகிறார்.. கிறிஸ்மஸ் நிகழ்வுக்குப் போகிறார்.. ஆனால் முருகர் கோவிலுக்கு மட்டும் செல்ல மாட்டேன் என்கிறார். இறை நம்பிக்கை என்றால் எல்லாமே ஒன்று தான். முதலில் அனைவரையும் சமமாக நடத்த கற்றுக்கொள்ளுங்கள்.
காவிரி பிரச்சினை
காவிரி பிரச்சினை பல காலமாக இருக்கிறது. அதைச் சரி செய்ய நடவடிக்கை இல்லை.. மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவேன் என்கிறார் துணை முதல்வர் சிவகுமார்.. அதைப் பற்றி பேசாமல் மத்திய அரசு அறிவிக்காத தொகுதி வரையறை குறித்துப் பேசுகிறார்கள்.. இந்தி திணிக்கப்படாது என்று மத்திய அரசு பல முறை கூறிய பிறகும் மீண்டும் அது குறித்தே பேசுகிறார்கள்.
தமிழகத்தில் கொலைகள் தொடர்ந்து நடக்கிறது. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியே கொல்லப்படுகிறார். ஆனால் முதல்வரோ சட்டசபையில் சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்கிறார். தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முதல்வர் முதலில் அக்கறை காட்ட வேண்டும். மற்ற மாநில பிரச்சினைகள் அதன் பிறகு பார்க்கலாம். தமிழக அரசின் தோல்வியை மறைக்கவே இதுபோல இல்லாத பிரச்சனையைக் கையில் எடுக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட்டம் செய்கிறார்கள்.
வீடியோ தான் வருது
மற்ற மாநிலங்கள் தங்களுக்கு எந்த திட்டம் வரும் என எதிர்பார்த்து இருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் இன்று என்ன வீடியோ வரப்போகிறது எனப் பார்க்கும் சூழலே இருக்கிறது.. எதையுமே சட்டை செய்யாத முதல்வர், சட்டையை மட்டும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு இருக்கிறார். சட்ட ஒழுங்கை மாற்றாமல் சட்டையை மட்டும் சரி செய்வதால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை" என்றார்.
செந்தில் பாலாஜி மீது தாக்கு
டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அமலாக்கத் துறை சொன்னதை தான் அண்ணாமலை கூறினார். சுமார் லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த நிதி தமிழகத்திற்கு வந்தால் மாநில கடன் 36 சதவீதம் குறையும். டாஸ்மார்க் கடைகளில் தமிழக முதல்வர் போட்டோவை ஒட்டியதால் பாஜக மகளிர் பிரிவினரைக் கைது செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இப்போது டாஸ்மாக் அமைச்சராக இருப்பவர் இதற்கு முன்பு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். அவர் ஓடறதுல இருந்தாலும் கமிஷன் அடிப்பார்.. போடறதுல இருந்தாலும் கமிஷன் அடிப்பார்" என்று சாடினார்.
கெட்ட கோபம் வரும்
மொழி கொள்கை குறித்து பேசிய அவர், "எதையும் திரித்துப் பேசக்கூடாது. இன்று இருக்கும் சூழலில் இரு மொழி போதும் எனக் சொல்வது செட் ஆகாது. மூன்று மொழிகள் நிச்சயம் தேவை. பிரதமர் மோடி மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழையே அதிகம் பயன்படுத்தியுள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் பாஜகவினர் தமிழுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள்..
இனிமேல் யாராவது என்னை ஹிந்தி இசை என குறிப்பிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும்.. நீங்கள் என்ன தமிழை வளர்த்திருக்கிறீர்கள்.. கனிமொழி சர்ச் பார்க்கில் படித்தவர்.. ஆனால் நான் தமிழ் மீடியத்தில் படித்தவர் எனக்குத் தமிழ் பத்தி பேச அனைத்து உரிமையும் உள்ளது" என்றார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ












Click it and Unblock the Notifications