கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை!- முக ஸ்டாலின்
திருச்சி: கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரும் எண்ணமில்லை என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கூறினார்.
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்க வந்த அவர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடையாது. இதை ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தேர்தல் முறைகேடு குறித்து திமுக சார்பில் அந்தந்தப் பகுதிகளில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் மீது திருப்தி இல்லாமல் வெறுப்படைந்துதான், சிறிய கட்சிகள், சிறிய அமைப்புகள் வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. சிறிய கட்சிகள், சிறிய அமைப்புகள்தானே எனக் கூறி அவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அவர்களுக்கும் நல்ல வாக்கு வங்கி இருக்கிறது.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல, தொகுதி பங்கீடு பணியும் நடைபெற்று வருகிறது. இவை முடிந்தவுடன் தகவல் தெரிவிக்கப்படும்," என்றார்.
கேள்வி: திமுக தலைவர் கருணாநிதியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறதே?
ஸ்டாலின்: அப்படி ஏதும் தெரியாது. தெரிந்தால் எனக்கு தகவல் தெரிவியுங்கள்.
கேள்வி: அதிமுக தேர்தல் அறிக்கையில் மது விலக்கு அமல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறதே?
ஸ்டாலின்: அது ஏமாற்றுவேலை.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications