திமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு இடம் இல்லை: திருநாவுக்கரசர் 'திடீர்' பல்டி
சென்னை: திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறுவதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர். தற்போது திமுக- காங். கூட்டணியில் தமாகாவுக்கு இடம் இல்லை என திட்டவட்டமாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளைக் கேட்டு வருகிறது. ஆனால் தமாகாவும் வரக் கூடும் என்பதால் இவ்வளவு தொகுதிகளை தர முடியாது என திமுக கூறியது. திமுக தரப்பில் அதிகபட்சம் 25 தொகுதிகளைத்தான் தர முடியும் என கூறி வருகிறது.

காங். அதிருப்தி
இதில் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்தது. அப்படி ஜி.கே.வாசனின் தமாகா, திமுக கூட்டணிக்கு வந்தால் தனித்துப் போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டையும் காங்கிரஸ் எடுக்க முன்வந்தது. இதைத்தான் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வலியுறுத்தியிருக்கிறார்.

வரும்...ஆனா வராது...
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், த.மா.கா.வும் ஒத்துப்போனால் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்று தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார். அதேபோல் த.மா.கா. வந்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தமாகாவின் மூத்த தலைவர் ஞானதேசிகன், நாங்கள் எந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய முடியாது; அவர்கள் ஒன்றும் எங்களுக்கு தடையில்லா சான்றிதழ் தர வேண்டாம் என சாடியிருந்தார்.

நாங்க பேச்சுவார்த்தை நடத்தலையே....
மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவீர்களா? என்ற கேள்விக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மவுனம் காத்து வருகிறார். இதனிடையே தமாகாவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கூறியிருந்தார்.

அந்தர்பல்டி அடித்த திருநாவுக்கரசர்
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க த.மா.கா. போராடி வருகிறது. அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரசும், த.மா.கா.வும் ஒரே கூட்டணியில் இருக்க முடியாது. எனவே தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு நிச்சயம் இடமில்லை என அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.
இதனால் திமுக- காங். கூட்டணியில் தமாகா இடம்பெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications