இந்த '4' கட்சிகளுக்கு மட்டும் மக்கள் நலக் கூட்டணியில் இடம் இல்லை: முத்தரசன்
சென்னை: அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் நலக் கூட்டணியில் இடம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,
மக்கள் நலக் கூட்டணி என்பது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. இந்த கூட்டணியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடம் இல்லை. ஊழல் இல்லா ஆட்சியை எங்கள் கூட்டணியால் தான் அளிக்க முடியும் என்றார்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை. தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக தலைவர் வைகோவும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications