திமுகவுடன் கூட்டணியா?: மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
சென்னை: திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தமிழ் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக -மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமையுமா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

திமுகவும் துணை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம், புதிய பென்ஷன் திட்டங்கள், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்றவற்றை செயல்படுத்துவதற்கு திமுக துணை போனது.

விலகிய பிறகும் ஆதரிச்சதே
மத்திய அமைச்சரவையில் இருந்தும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் விலகிய பிறகுதான் உணவு பாதுகாப்பு மசோதாவை அக்கட்சி ஆதரித்தது.

இரண்டும் ஒன்றுதான்
எனவே காங்கிரஸ் செய்த தவறுகளில் இருந்து திமுகவைப் பிரித்துப் பார்க்க முடியாது.

திமுக வாதம் சரியல்ல
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கை காங்கிரஸின் தூண்டுதலின்பேரில்தான் சிபிஐ விரைவுபடுத்தியது என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. காங்கிரஸ் அரசு அமைதியாக இருந்த நேரத்தில், உச்சநீதிமன்றமே அலைக்கற்றை ஊழலைக் கையில் எடுத்துக் கொண்டு விரைவுபடுத்தியது.

திமுக ஆதரவு இல்லை
எனவே இதுபோன்ற காரணங்களால் திமுக ஆதரவு நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்


Click it and Unblock the Notifications
