அதிமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் பாஜக நெருக்கடியே தரவில்லை: பொன்னையன் திட்டவட்டம்!
அதிமுகவுக்கு பாஜகா நெருக்கடியே தரவில்லை என பொன்னையன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் அணுகுமுறையை அதிமுக தொடர்ந்து பின்பற்றும் என்றும் பொன்னையன் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி நெருக்கடி எதுவுமே தரவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்த்தது முதலே அதிமுக ஆட்சி, கட்சிக்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஜெயலலிதாவை மறைவைத் தொடர்ந்தும் முதல்வர் யார்? அதிமுக பொதுச்செயலர் யார் என்பதிலும் பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சென்னையில் இன்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பொன்னையன் அளித்த பதில்:
அதிமுக ஜெயலலிதாவின் அணுகுமுறையை பின்பற்றுகிறது. யாரிடம் இருந்தும் எந்த ஒரு நெருக்கடியும் அதிமுகவுக்கு வரவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆத்மா அதிமுகவைக் காப்பாற்றும். அதிமுக கொள்கை கோட்டையாக திகழ்கிறது.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications