சிம்புவைக் கைது செய்ய போலீசாருக்கு எந்தத் தடையும் இல்லை!- உயர் நீதிமன்றம்
சென்னை: ஆபாச பாடலை உருவாக்கிப் பாடிய சிம்பு மற்றும் அனிருத்தைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் நடிகர் சிம்பு எந்த நேரமும் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது. அனிருத் கைதிலிருந்து தப்பிக்க கனடாவிலேயே பதுங்கியுள்ளார். அவரது தந்தையிடம் மீண்டும் சம்மனை வழங்கியுள்ளனர் போலீசார்.
இன்று சிம்பு தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைத்தார்.

மேலும் சிம்பு, அனிருத்தின் பீப் பாடலை அவர் உணவு இடைவேளையின்போது கேட்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அரசுத் தரப்பில்.
பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையின்போது, சிம்புவுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று அரசுத் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மகளிர் அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் சிம்புவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்றனர்.
பின்னர் இந்த வழக்கை வரும் ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார் நீதிபதி. சிம்பு விசாரணைக்காக நேரில் ஆஜராக போலீசார் குறிப்பிட்டிருந்த டிசம்பர் 30 ம் தேதியை, ஜனவரி 4 வரை நீட்டிக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அதே நேரம், போலீசார் சிம்புவைக் கைது செய்ய எவ்விதத் தடையும் இல்லை என்றால், தேவைப்பட்டால் எந்த நேரமும் போலீசார் கைது செய்யலாம் என்றும் உத்தவிட்டார்.
அனிருத் தகரப்பில் முன்ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அவரும் இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு வரவேண்டும் என கோவை மற்றும் சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆகவே அனிருத்தைக் கைது செய்யவும் போலீசுக்கு எந்தத் தடையும் இல்லை. எனவே கனடாவிலிருந்து அவரை சென்னை திரும்ப போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்தனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications