ஈழத் தமிழருக்கு எதிராக எந்தக் காட்சியும் வைக்கவில்லை!- வெங்கட்பிரபு
சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படத்தில் ஈழத் தமிழருக்கு எதிராக எந்தக் காட்சியும் வசனமும் வைக்கப்படவில்லை என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை.

படத்தில் ஈழத்தமிழ் பேசுகிறவனா.. ‘உன்னை உதைக்க வேண்டும்' என்று ஈழத்தமிழர்களையும், ஈழத்தமிழையும் கொச்சைப்படுத்துவதுபோல் வசனம் இருந்ததால்தான் வரிச்சலுகை அளிக்கவில்லை என்று தணிக்கை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பாடலாசியர் சினேகன் தெரிவித்திருந்தார்.
படத்தில் ஒரு காட்சி. அதில் ஈழத் தமிழரான சூர்யாவின் நிலங்களை தமிழகத்தில் இருக்கும் தாதாவான சமுத்திரக்கனி அன்ட் கோ பறித்துக் கொள்கிறது.
அதைத் தட்டிக் கேட்கிறார் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் சூர்யா. அப்போது சூர்யா பேசும் தமிழை வைத்து அவரிடம், ‘நீ சிலோனா' என சமுத்திரக்கனி கேட்பார். உடனே சூர்யா, ‘தமிழின்டா நான். சொந்த மன்ணைப் பறி கொடுத்துப் போட்டு தனக்கு ஒரு அடையாமில்லாம இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறவனோட வலி என்னவெண்டு தெரியுமா உனக்கு' என்பார்.
இந்தக் காட்சியில் ஈழத் தமிழர்கள் கொச்சைப்படுத்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் அளித்துள்ள பதில்:
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வசனங்களோ காட்சிகளோ அந்தப் படத்தில் இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மலேசியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
படத்தை பார்த்த ஈழத் தமிழர்கள் யாரும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்தவர்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழர்கள்தான்," என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications