அவ்வளவு உதவிகள் செஞ்சாரே.. சிட்டிங் எம்பி செந்திலுக்கு சீட் மறுப்பு.. தர்மபுரியில் புது முகம்! யார்?
தருமபுரி: மக்களவைத் தேர்தலுக்காக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தற்போது தருமபுரி சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு அ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,

1 ) வடசென்னை - கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6) வேலூர் - கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி - அ.மணி
8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் - செல்வ கணபதி
10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்
11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா
12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
13 ) கோவை - கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி
15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
18 ) பெரம்பலூர் - அருண் நேரு
19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்
20 ) ஈரோடு - பிரகாஷ்
21 ) ஆரணி - தரணி வேந்தன்

சிட்டிங் எம்பி சீட் மறுப்பு: தருமபுரி சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு அ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து செந்தில் 574,988 வாக்குகள் பெற்று வென்றார். அன்புமணி 5,04,235 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலமும், எம்பி நிதி மூலமும் பலரின் மருத்துவ செலவிற்கும், பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்கும் செந்தில் உதவி செய்து வந்தார். ஆனாலும் தொகுதியில் இவரின் பெயர், கட்சி நிர்வாகிகள் இடையிலான இவரின் உறவு சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது தருமபுரி சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு அ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
திமுக தேர்தல் பிளான்: 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
போட்டியிடும் தொகுதிகள் விவரம்: திமுக - 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி, )
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது)
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2 (நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது)
சிபிஎம் - 2 ( மதுரை, திண்டுக்கல்)
மதிமுக -1 (திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது)
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications