நிலவேம்பால் பக்கவிளைவு ஏற்படாது.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!
நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி: நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் நிலவேம்பு கஷாயம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
நிலவேம்பு குறித்து சரியான ஆராய்ச்சி வரும் வரை பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்க வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசனின் இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் பீதியடைந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நிலவேம்பு கஷாயத்தால் எந்த விளைவும் ஏற்படாது என தெரிவித்தார். மேலும் நிலவேம்பு கஷாயம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
டெங்கு காய்ச்சலைக் கண்டறியும் கருவிகள் கூடுதலாக வாங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications