‘அம்மா’ ஸ்டிக்கர் இல்லாமல் அதிமுக திருமணம்... நம்பினால் நம்புங்கள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஜெயலலிதா பிறந்ததினத்தை முன்னிட்டு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். இந்தத் திருமணத்தில் மணமக்கள் மீதோ, சீர்வரிசை மீதோ அம்மா ஸ்டிக்கர் இல்லாமல் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை இலவச திருமணங்கள், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் என அதிமுகவினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.

No stickers in ADMK marriage

அந்தவகையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்.

சீர்வரிசை...

இந்த விழாவில், கழக அவைதலைவர் மதுசூதனன் உள்பட அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மணமக்களுக்கும் 68 சீர்வரிசையுடன் 4 ஆடுகளும் வழங்கப்பட்டன.

நிவாரணப் பொருட்களில்...

கடந்தாண்டு தமிழகத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டபோது, பல்வேறு இடங்களில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களில் அதிமுகவினர் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த ஸ்டிக்கர் விவகாரம் பூதாகரமாகப் பார்க்கப்பட்டது.

மணமக்களின் நெற்றியில்...

அந்தவகையில் சமீபத்தில் அதிமுகவினரால் நடத்தப்பட்ட இலவச திருமணத்தில் மணமக்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டனத்திற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இலவச திருமணத்தில் மணமக்களின் மாலையில் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது.

ஆடுகளின் மீதும்...

அதேபோல், இலவச பொருட்கள், ஆடு போன்றவற்றிலும் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு ஊடகங்களில் திமுக வெளியிட்டிருந்த விளம்பரத்தில்கூட இந்த ஸ்டிக்கர் விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆச்சர்யம் ஆனால் உண்மை...

இந்நிலையில், இன்று நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இலவச திருமணத்தில் அம்மா ஸ்டிக்கர் இல்லாமல் இருந்தது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்டிக்கர் மிஸ்ஸிங்...

ஸ்டிக்கர் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, வெறும் ஆடுகளாகவும், பாத்திரங்களாகவும் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மணமக்கள் நெற்றியிலுலோ, அல்லது மாலையிலோ கூட ஜெயலலிதா படம் இல்லை. மணமக்கள் கட்சிகரையுடன் மாலை மட்டும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் நடத்திய திருமணத்திலும்...

இதேபோல், தேனியிலும் 68 ஜோடிகளுக்கு அம்மா ஸ்டிக்கர் ஓட்டாமல் அமைச்சர் ஓபிஎஸ், திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்திய அமைச்சர், தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தியை மணமேடையில் வாசித்து காண்பித்து மணமக்களை வாழ்த்தினார்.

சீர்வரிசைகளில்...

இதில் விசேஷம் என்னவென்றால், மணமக்கள் நெற்றியில் மட்டும் அம்மா ஸ்டிக்கர் ஓட்டப்படவில்லை. ஆனால், மணமக்களுக்கு கொடுத்த குத்துவிளக்கு முதல் அண்டா உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வரை அம்மா ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+