திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது- பொன். ராதாவிற்கு ஸ்டாலின் சூடு
திராவிட இயக்கத்தை அழிக்க அல்ல... எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் புது கல்லூரி மாணவர்கள் இன்று ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
மாணவர்கள் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழர்களின் வீர வளையாட்டாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசையும் கேட்டுக் கொள்ளக்கூடிய வகையில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என மத்திய அமைச்சர்கள் கூறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மிகப்பெரிய போராட்டம்
தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை மாணவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் 1965ம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டம் தமிழகத்தில் நடந்தது என்றார்.

மாணவர்கள் போராட்டம்
1965ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் தற்போது மாணவர்கள் போராடி வருகின்றனர் என்று கூறிய ஸ்டாலின், தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அலட்சியப்படுத்த வேண்டாம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். மாணவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் அரசுகளுக்கு வீழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் எச்சரித்தார்.

யாராலும் தொடக்கூட முடியாது
திராவிட இயக்கத்தை போகியில் எரித்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், திராவிட இயக்கத்தை அழிக்க அல்ல எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications