For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஒரு சிங்கம்- அதிமுக, ஆட்சியை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது: கூவத்தூரில் சசிகலா

அதிமுகவையும் ஆட்சியையும் எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது; சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறப்பதுதான் என் வாழ்நாள் பாக்கியம் என சசிகலா பேசியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தாம் ஜெயலலிதா எனும் சிங்கத்திடம் இருந்த குட்டி சிங்கம்; தாம் உயிருள்ளவரை அதிமுகவையும் ஆட்சியையும் காப்பாற்றுவேன் என சிறைவைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய சசிகலா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள 129 எம்.எல்.ஏக்களிடையே இன்று சசிகலா பேசியதாவது:

ஜெயலலிதா எனும் சிங்கத்துடன் இருந்த குட்டி சிங்கம் நான். ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் அனனவருமே சிங்கங்கள்தான்.

Nobody can even touch ADMK and Govt, says Saasikala

அதிமுகவில் ஒரு குட்டி சிங்கம் வந்துவிட்டதே என எரிச்சலடைந்துள்ளனர். எத்தனை வலை விரித்தாலும் அதை எதிர்கொண்டு இந்த சிங்கம் வெளியே வரும்.

அதிமுக ஆட்சியை எப்படியாவது கலைத்துவிடலாம் என நினைக்கின்றனர். இதற்காக எட்டப்பர்களை வைத்து ஆட்சியை கலைக்கவும் முயற்சிக்கின்றனர்.

இங்கே 129 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். நீங்கள்தான் அரசாங்கம். நீங்கள் 129 பேரும் சிங்கங்கள். நானும் ஒரு சிங்கம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை எதுவும் செய்துவிட முடியாது.

நான் ஜெயலலிதா நினைவிடத்தில் நின்றபோது என்னை நகரவிடாமல் ஒரு ஈர்ப்பு சக்தி தடுத்தது. அப்போது அங்கே அதிமுகவையும் ஆட்சியையும் உயிருள்ளவரை காப்பாற்றுவேன் என உறுதி எடுத்துக் கொண்டேன்.

என் உயிருள்ளவரை அதிமுகவையும் ஆட்சியையும் காப்பாற்றுவேன். எந்த கொம்பனாலும் அதிமுகவையும் ஆட்சியையும் அசைத்துவிட முடியாது; என் உயிரை கொடுத்து ஆட்சியையும் அதிமுகவையும் கைப்பற்றுவேன்.

நம் கையாலே நம் கண்ணை குத்துகிறார் ஓ. பன்னீர்செல்வம். நாம் ஒற்றுமையாக இருந்தால் டெல்லி வரை யாரும் எதுவும் செய்ய முடியாது.

எம்.எல்.ஏக்கள் என்னுடன் இருந்தால் எதையும் சாதிப்பேன்; என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டேன்.

அதிமுகவையும் ஆட்சியையும் தக்க வைக்க எந்த முடிவையும் தெளிவாக எடுப்போம்; நானும் ஜெயலலிதாவும் சென்னை, பெங்களூர் சிறைகளைப் பார்த்தவர்கள்; சிறையில் இருந்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறோம்.

பெண் என்றுதானே அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். அது நடக்காது. சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கவிடாமல் சதி செய்கிறார்கள்.

நாம் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும்; ஜெயலலிதா படத்தை திறப்பதுதான் என் வாழ்நாள் பாக்கியம். நாம் நிச்சயம் ஆட்சி அமைப்போம். 129 பேரும் ஜெயலலிதா நினைவிடத்தில் நின்று புகைப்படமெடுத்து அங்கிருந்து கோட்டைக்கு செல்வோம் என ஜெயலலிதா படம் முன்பாக சபதமெடுப்போம்.

இவ்வாறு சசிகலா கூறினார்

English summary
ADMK Interim General Secretary Sasikala who the addresses party MLAs at Golden Bay resort said that Nobody can even touch this party and Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X