கள்ளக்குறிச்சி எங்க கோட்டை.. யாரும் ஓட்டை போட முடியாது- ராமதாஸ்
ஆத்தூர்: கள்ளக்குறிச்சி தொகுதி பாமகவின் கோட்டை. வன்னியர் கோட்டை. இங்கு யாரும் ஓட்டை போட முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியை பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்குத்தான் கொடுத்துள்ளனர். ஆனால் ரா்மதாஸ் அதிரடியாக இங்கு பாமகதான் போட்டியிடும் என்று கூறி விட்டார். மேலும் ஆத்தூர் சண்முகத்தை வேட்பாளராகவும் அவர் அறிவித்துள்ளார்.
வேட்பாளர் சண்முகம் அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று ஆத்தூர் அருகே நடந்தது. அதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில், இந்த கள்ளக்குறிச்சி தொகுதி, எப்போதும் பா.ம.க.வின் கோட்டை. இந்த கோட்டையில் யாரும் ஓட்டைபோட முடியாது.

வேட்பாளர் சண்முகம் வெற்றிபெற நாம் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். இந்த பகுதியில் உள்ள நமது வாக்குகளை அப்படியே வாங்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது. வேட்பாளர் சண்முகத்தின் வெற்றிக்காக அனைத்து வழிகளிலும் பாடுபடுவோம் என்றார் ராமதாஸ்.
வேட்பாளரை அறிவித்ததோடு நில்லாமல் அவரை உடனடியாக வந்து அறிமுகப்படுத்தி பேசியும் சென்றுள்ள ராமதாஸின் செயலால் பாஜகவும், தேமுதிகவும் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications