உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ரிசைன் பண்ணிடுங்க... சச்சின், ரேகாவை விளாசும் சமாஜ்வாதி எம்.பி.
டெல்லி: ராஜ்யசபைக்கான நியமன எம்.பி.க்களான சச்சினும், ரேகாவும் மாநிலங்களவைக்கு வராதது ஏன் என்று கேள்வி எழுப்பிய சமாஜ்வாதி எம்.பி. அவர்களுக்கு வர விருப்பம் இல்லை எனில் ராஜினாமா செய்திருக்கலாமே என்று தெரிவித்தார்.
ராஜ்யசபாவுக்கு தற்போது 245 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுள் 233 உறுப்பினர்கள் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 12 உறுப்பினர்கள் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவைகள் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களை ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும்.

அதன்படி சச்சினும், ரேகாவும் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஒருநாள் கூட அவைக்கு வரவில்லை. எம்.பி.க்களாக இருந்தும் அவை நடவடிக்கையில் கலந்துகொண்டு, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், இந்த கூட்டத் தொட்ரின் இரண்டாவது அமர்வில் சச்சினையும், ரேகாவையும் நான் பார்த்ததில்லை. அவர்கள் அவைக்கு வராததால் மக்கள் பணியாற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லையெனில் அவர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.
துணை சபாநாயகர் குரியன் பேசுகையில், இது அவை உரிமை மீறலின் கீழ் வராது என்றும், நியமன உறுப்பினர்கள் அவையில் சில நாட்கள் இருக்கும் வகையில் அவர்களை அகர்வால் சம்மதிக்க வைக்கலாம் என்றும் கூறினார். அவைத் தலைவர் அறிவுறுத்தினால், அந்த உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதுவதாக அகர்வால் கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications