ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் வேட்புமனுக்கள் ஏற்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய வேட்பு மனுதாக்கல் சுமார் ஒரு வாரம் நடைபெற்று நேற்று மதியத்தோடு முடிவடைந்தது.
இதில் சுமார் 6,700க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுப் பார்வையாளர்கள் 122 பேர் முன்னிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படுகிறது. நிராகரிக்கப்படும் வேட்பு மனுக்கள் குறித்த தகவல்கள் இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏற்கப்பட்ட முக்கிய பிரமுகர்களின் வேட்புமனு குறித்த தகவல் ஒவ்வொன்றாக வெளியாகிக்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தி.நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல உளுந்தூர்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும், அன்புமணி ராமதாஸ், கடலூர் தொகுதியில் போட்டியிடும் 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரது வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications