கருப்பசாமி பாண்டியன் கைதானால் ஜாமீன் கிடைக்காது...கிடுக்கிப் பிடி வழக்குப் பதிவு!
நெல்லை: நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது போடபப்ட்டுள்ள வழக்கின் பிரிவுகளால் திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம், அத்தனையும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகள் ஆகும்.
நெல்லை டவுனை சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் நாலடியாரின் மகள் தமிழரசி. இவர் கட்சியில் பொறுப்பு கேட்டு, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனை சந்திக்க சென்ற இடத்தில் அவர் ஆபாசமாக பேசியுள்ளார். தமிழரசியின் தந்தையை வெளியே இருக்கச்செய்துவிட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.
இதுகுறித்து தமிழரசி நெல்லை டி.ஐ.ஜி.,அலுவலகத்தில் புகார் செய்தார். இதுகுறித்து தென்காசி ஏ.எஸ்.பி.,அரவிந்தன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் மன்னவன் ஆகியோர் நேரடியாக நெல்லை வந்து தமிழரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். நெல்லை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த விசாரணையின் போது, அவர் பேசிய போன் எண், உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கருப்பசாமிபாண்டியன் மீது பெண்களை எதிரான வன்கொடுமை சட்டம் (செக்ஷன் 4 ஆப் விமன் ஹராஸ்மென்ட் ஆக்ட்), அவதூறாக திட்டுவது 294 (பி),கொலைமிரட்டல் 506 (2) விடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
இவற்றில் இரண்டு பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் அவர் கைதானால் ஜாமீன் கிடைப்பது சிரமம் என்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications