வெங்கடேஷ் பாபுவிடம் வண்டிக சாஸ்தியா இருக்கே...!

Subscribe to Oneindia Tamil

North Chennai ADMK candidate Venkatesh Babu's assets
சென்னை: வட சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு தன்னிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். கூடவே அவரிடம் சில பழைய வண்டிகளும் நிறையவே இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

வெங்கடேஷ் பாபு தாக்கல் செய்துள்ள சொத்து விவரம்..

கையிருப்பு ரொக்கம் ரூ.1 லட்சம். முதலீடாக ரூ.85,722, ரூ.5 லட்சம் மதிப்புள்ள இன்னவோ கார், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பஜாஜ் பல்சர், ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பஜாஜ் பைக், ரூ.2.24 லட்சம் மதிப்பில் 80 கிராம் தங்கம் என ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்து 431 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனைவி மஞ்சுளா கையிருப்பு ரொக்கமாக ரூ.25 ஆயிரம். முதலீடாக ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 730 மற்றும் ரூ.57,882 உள்ளது. ரூ.22.40 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் தங்கம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 கேரட் வைரம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் என ரூ.42 லட்சத்து 15 ஆயிரத்து 702 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பயன்படுத்தாத விவசாய நிலங்கள் ரூ.72 லட்சத்திலும், அவரது மனைவி பெயரில் ரூ.5 லட்சம் மதிப்பில் நிலங்களும் உள்ளன. குடியிருப்பு வீடுகள் வேட்பாளர் பெயரில் ரூ.2.57 கோடியிலும், மனைவி பெயரில் ரூ.25 லட்சத்திலும் உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+