தென் தமிழக மக்களே உஷார்.. கன மழை வரப் போகிறதாம்.. வானிலை மையம் அறிவிப்பு
இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சென்னை: இந்தயப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பருவ மழை உரிய நேரத்தில் தொடங்காமல் கால தாமதமாக அக்டோபர் 30ம் தேதி மழை தொடங்கியது. என்றாலும், 2 நாட்கள் மட்டுமே சற்று கனமான மழை தமிழகம் முழுவதும் பெய்தது. அதன் பிறகு, சரிவர பெய்யவில்லை. மாறாக பனி பெய்து குளிரத் தொடங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

ஆனாலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 5 செ.மீ. மழையும், மயிலாடி மற்றும் கன்னியாகுமரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications