வடகிழக்கு பருவமழை: மின்கம்பி அறுந்து விழுந்தால் அவசர எண்ணில் கூப்பிடுங்க - மின்சார வாரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருவமழை கொட்டி வரும் நிலையில் சென்னையில் மின் கம்பிகள் மற்றும் மின் சாதனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பொதுமக்கள் தகவல் அளிக்கும் வகையில் தொலைபேசி எண்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலே மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலே புகார் அளிக்க அவசர உதவி எண்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சாரம் தொடர்பான அவசர உதவிகளுக்கு எந்தப்பகுதி மக்களாக இருந்தாலும் 944-5850-909, 944-5850-900 ஆகிய கைப்பேசி எண்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

North East Rain: EB announces emergency numbers

அண்ணாநகர் - அம்பத்தூர்

அண்ணாநகர் கோட்டத்திற்குட்பட்ட மக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 044-26154408 அல்லது 944-5850-286 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அம்பத்தூர் மின்கோட்டத்திற்குட்பட்ட மக்கள் 044 - 26248282 மற்றும் 944-5850-311 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

ஆவடி மக்களே!

ஆவடி கோட்டத்திற்குட்பட்ட மக்கள் 044 - 26375613, 044 - 26370410 ஆகிய தொலைபேசி எண்களிலும், 944-5850-344 என்ற கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தி.நகர் - மயிலாப்பூர்

தி.நகர் மின்கோட்டத்திற்குட்பட்ட பகுதியினர் 044 - 28235658, 044 - 28254900 மற்றும் 944-5850-727 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மயிலாப்பூர் கோட்டத்திற்குட்பட்டவர்கள் 044 - 28116281 மற்றும் 944-5850-717 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

எழும்பூர் பகுதிவாசிகள்

அண்ணாசாலை கோட்டத்திற்குட்பட்டவர்கள், 044 - 25341953, 044 - 25342645 மற்றும் 944-5850-686 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். எழும்பூர் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் 044 - 26624703, 044 - 26625528 மற்றும் 944-5850-696 என்ற எண்களை தொடர்புகொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை கூறலாம். பொன்னேரி மின்வாரிய கோட்ட மக்கள் 960-0454-077, 944-5850-915 ஆகிய கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பெரம்பூர் மக்களுக்கு

பெரம்பூர் கோட்ட மக்கள் 044-25375783, 944-5850-959 ஆகிய எண்களிலும், தண்டையார்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் 044 - 25750656, 044 - 25752573 மற்றும் 944-5850-889 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

வியாசர்பாடி மக்களுக்கு

வியாசர்பாடி மின்கோட்டத்திற்குட்பட்ட மக்கள் தங்கள் புகார்களை 044- 25516248, 9094 - 9340 -000 மற்றும் 944 - 5850 -871 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+